கார்கில் -ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் ..

PM Modi - 2026

கார்கில் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். பின்னர் உரையாற்றிய அவர் தீபாவளி என்றால் பயங்கரவாதத்தின் முடிவுப் பண்டிகை, கார்கில் அதை சாத்தியமாக்கியது என்றார்.

மோடி பிரதமராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று எல்லை பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, 2014ல் சியாச்சின் பகுதி, 2015ல் பஞ்சாப் எல்லை, 2016ல் இமாச்சல பிரதேச எல்லை, 2017ல் ஜம்மு-காஷ்மீர் எல்லை, 2018ல் உத்தரகாண்ட், 2019ல் ஜம்மு-காஷ்மீர், 2020ல் ராஜஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்.

இந்தாண்டு தீபாவளி பண்டிகையை காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். பின்னர் ராணுவ வீரர்களுடன் அவர் உரையாற்றியதாவது,

gallerye 12190719 3153470 - 2026

என்னைப் பொறுத்தவரை ராணுவ வீரர்களாகிய நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனது குடும்பமாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது ஒரு பாக்கியம். இதை விட சிறந்த தீபாவளியை என்னால் கொண்டாடியிருக்க முடியாது. என் உற்சாகம், பலம் உங்களுடன் இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற இந்த கார்கில் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி என்றால் ‘பயங்கரவாதத்தின் முடிவுப் பண்டிகை’; கார்கில் அதை சாத்தியமாக்கியது. கார்கிலில் நமது ராணுவம் பயங்கரவாதத்தை நசுக்கியது. நமது எல்லைகளை ஆயுதப்படைகள் பாதுகாப்பதால் தான், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக உறங்குகிறார்கள். நீங்கள் எல்லையில் இருந்து எங்களை பாதுகாப்பது போல் ஊழல் போன்ற தீமைகளை எதிர்த்து நாட்டிற்குள் செயல்படுகிறோம். இந்தியாவின் ஆயுதப் படைகளின் ஆத்மாவுக்கு நான் தலைவணங்குகிறேன். உங்களின் தியாகங்கள் எப்பொழுதும் நம் நாட்டை பெருமைப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories