வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகை..

IMG 20221024 WA0101 1 - 2026

இரண்டு ஆண்டுகள் நீடித்த கொரோனா அலைக்குப்பின் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்த மக்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் வட மாநிலங்களிலும் நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு குடியரசு தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களையத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறார்கள். தீபாவளி பண்டிகை பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். தீபாவளியின் ஒளி நம் அகம் மற்றும் புற அறியாமை இருளை அகற்றும் ஞானத்தைக் குறிக்கிறது. ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் ஆழமாக வளரட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: தீபத் திருநாளில் நம் நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் எனது அன்பான, மகிழ்ச்சிகரமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படும் தீபாவளி, பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கிறது. மேலும் ராம ராஜ்ஜியத்தின் வருகையையும் தீபாவளி குறிக்கிறது. தீபாவளி என்பது செல்வச் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவி மற்றும் ஞானம், நல்லதொரு எதிர்காலத்தை அருளும் அதிர்ஷ்டத்தின் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான சந்தர்ப்பமாகும். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் ஞானம், இறையச்சம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேம்படுத்தட்டும். நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறபான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

IMG 20221024 WA0109 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories