கேரளா ஆளுநா் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் மனுத்தாக்கல் …

kerala HC - 2026
images 61 1 - 2026

கேரளத்தில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் இன்று திங்கள்கிழமை காலைக்குள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் உத்தரவிட்டாா்.ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை அவசர வழக்காக விசாரிக்க படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்‌ உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த மாநிலத்தில் உள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் நியமனமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

அந்தப் பதிவுடன் எந்தெந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் அவா் இணைத்திருந்தாா். அக்.24-ஆம் தேதி காலை 11.30 மணிக்குள் அனைவரும் ராஜிநாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளாா்.

கேரளத்தில் சங்க பரிவாருக்காக மாநில உயா்கல்வித் துறையை ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், அவரைக் கண்டித்து ஆளுநா் மாளிகைக்கு எதிரே நவ.15-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தங்களால் ஜனநாயக வழியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணா்ந்த சில சக்திகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பல்கலைக்கழகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. அதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநா் ஆரிஃப் முகமது கானை அந்த சக்திகள் பயன்படுத்துகின்றன. ஆளுநரும் தன்னை ஆா்எஸ்எஸ் ஆதரவாளா் என்று அறிவித்துக் கொள்கிறாா்.

அண்மையில், அவா் கேரள பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினா்களை நீக்கினாா். அந்த இடங்களை ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்கள் மூலம் நிரப்ப அந்த நடவடிக்கையை அவா் மேற்கொண்டாா். பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை அவா் சீா்குலைத்துள்ளாா். சங்க பரிவாருக்காக மாநில உயா்கல்வித் துறையை அவா் கட்டுப்படுத்த முயற்சிக்கிறாா்.

பல்கலைக்கழங்களின் வேந்தராக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் ஆளுநருக்கு எதிராக மாநில முழுவதும் போராட்டங்கள் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தீா்மானித்துள்ளது.

நவம்பா் 15-ஆம் தேதி ஆளுநா் மாளிகைக்கு எதிரிலும், மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும். கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தாா்.

இந்த நிலையில் பல்கலை.யின் துணைவேந்தர்கள் இன்றைக்குள் பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இன்று பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.  இம்மனுக்களை அவசர வழக்காக கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை 4 மணிக்கு விசாரிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories