
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் காயமடைந்த வர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களில் ஆறுதல் கூறி விபத்து குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார்.அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும் உடன் இருந்தார்.
குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அதிக எடை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்து விபத்து நேரிட்டது.அப்போது பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு மீட்டனர்.
எனினும் காணமல் போனவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களைத் தேடும் பணிகளையும் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 135ஆக அதிகரித்துள்ளது. 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட மோர்பி பகுதியையும், விபத்தில் காயமடைந்தவர்களையும் சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் விரைந்தார். பிரதமரின் வருகையையொட்டி மோர்பி அரசு மருத்துவமனையில் இரவோடு இரவாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில் விபத்து நடைபெற்ற மோர்பி பகுதிக்கு பிரதமர் மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலுடன் பிரதமர் மோடி விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
விபத்து நேரிட்ட மச்சு நதியில் குஜராத் மாநில மீட்புப் படையினர் காணாமல் போனவர்களைத் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மோர்பி மருத்துவமனையில் பிரதமர் மோடி! காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்..

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.
மோர்பி மருத்துவமனைக்கு வந்த பிரதமர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசனை..
குஜராத் தொங்கு பால விபத்து குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்துகொடுக்க வேண்டும் எனவும் ஆலோசனையில் அறிவுறுத்தியுள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 135ஆக அதிகரித்துள்ளது. 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோர்பி பால விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீட்புப் பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்துகொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார்.
மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 134-ஆக ஆனது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மோா்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிடவிருக்கிறார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 4 லட்சமும் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் என ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார்.
மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்னும் காணாமல்போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.






