திருமலையில் டிசம்பர் ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..

images 28 - 2026

ஆந்திர பிரதேசம் திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர். இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 66,946 பேர் தரிசனம் செய்தனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories