
முனைவர் கு.வை.பா அவர்களின் வானிலை அறிக்கை, 11.11.2022, காலை 0915 மணி
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்றும் பல இடங்களில் மிதமான மழை (2 செமீ முதல் 6 செமீ வரை) பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை (7 முதல் 11 செமீ வரை) ஓரிரு இடங்களில் மிகக் கனமழை (12 செமீ முதல் 20 செமீ வரை) பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று முதல் லேசான முதல் மிதமான மழை தொடங்கும்
படம் 1- சென்னை டாப்ளர் ராடார் படம் இன்று காலை இந்திய நேரப்படி 0900 மணிக்கு எடுக்கப்பட்டது.

படம் 2- காரைக்கால் டாப்ளர் ராடார் படம் இன்று காலை இந்திய நேரப்படி 0902 மணிக்கு எடுக்கப்பட்டது.
