மாரடைப்பால் மரணமடைந்த மனைவி துக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த கணவர்..

Published:

ayyanavaram - 2026

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பிரியாணி சாப்பிட்டு திடீர் மாரடைப்பில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தம்புசாமி (53). பிளம்பிங் வேலை பார்த்து வரும் இவருக்கு, 23 வருடங்களுக்கு முன்பு பவானி(47) என்பவருடன் திருமணமாகி 22 வயதில் யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் நேற்று பவானி மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் சென்றார். அங்கு பிரியாணி சாப்பிட்ட பவானி, பின்னர் வீட்டிற்கு உறவினருடன் நடந்து வந்தபோது திடீரென பவானிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக உறவினர் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பவானி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து பவானியின் கணவர் தம்புசாமி, அவரது மகள் யுவஸ்ரீ ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இறந்த பவானியின் உடலை கண்டு கதறி அழுதனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்த தம்புசாமி காணாமல் போனதால், அவரது மகள் யுவஸ்ரீ செல்போனில் தொடர்பு கொண்டபோது தம்புசாமி செல்போனை எடுக்காததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர். பின்னர் பவானியின் உடலை ஆட்டோ மூலம் வீட்டிற்கு எடுத்து வந்தபோது, வீட்டின் சமையல் அறையில் தம்புசாமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 தகவலறிந்த அயனாவரம் போலீசார் தம்பு சாமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயனாவரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img