2022 மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தற்போது திறப்பு..

FB IMG 1668609182123 - 2026

பக்தர்கள் சரணகோஷம் முழங்க 41நாள் மண்டலபூஜைக்காக உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை  திறக்கப்பட்டது.டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. 2023 ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.

FB IMG 1668609187062 - 2026

மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி‌கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து நெய் தீபமேற்றி அணையாவிளக்கில் தீபமேற்றி 18படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபமேற்றி வைத்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயனின் தவக்கோலத்தை களைந்து ஐயரிடம் 41நாள் மண்டலபூஜை நடத்த அனுமதி கேட்டு ‌பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

20221116 170305 - 2026
20221116 170323 - 2026

அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில்மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில் நடைபெற்றது.நாளை (வியாழக்கிழமை) அதிகாலை புதிய மேல்சாந்தி நடை திறந்து நெய்விளக்கு ஏற்றி வைக்க 41நாள் மண்டலபூஜை வழிபாடு துவங்கி நடைபெறும். மண்டல காலத்தில் நெய் அபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

20221116 170347 - 2026
20221116 170004 - 2026

பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு பின்னர்இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.
விழாவில் திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FB IMG 1668595810918 - 2026
FB IMG 1668595815739 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories