ஏக் பாரத் ஷ்ரேஷ்ட் பாரத் லோகோ போல் உள்ளது: கமல் கட்சி சின்னம் பற்றி கலாய்க்கும் ஹெச்.ராஜா

சற்றுமுன் தமிழகம்

சென்னை:

கமல் ஹாசன் நேற்று மதுரையில் தனது கட்சி சின்னத்தை அறிமுகம் செய்து கொடியேற்றி, கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதில் , அவரது கட்சி சின்னம் குறித்து பலரும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். இது ஏற்கெனவே உள்ள சின்னம் என்றும், மும்பை செம்பூர் தமிழ்ச் சங்க லோகோவை அப்படியே கடன் வாங்கி கமல் காபி செய்து கொடியில் ஏற்றியிருக்கிறார் என்றும், படத்தைத்தான் காபி செய்வார்; கட்சி லோகோவையுமா? என்று கமலை கலாய்த்து நெட்டிசன்ஸ் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, கமலின் கட்சி லோகோ ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத் லோகோவில் இருந்து காப்பி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். கமலின் கட்சி லோகோ ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை ஆன்டி கிளாக்வைஸில் திருப்பி போட்டால் அதுதான் கமல் கட்சி என்று விமர்சனம் செய்திருக்கிறார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது இதன் பொருள்.

நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் கட்சிக் கொடிக்கும் கொள்கைக்கும் அடுத்தவரிடம் இருந்து சுட்டுத் தள்ள வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.