காசிக்கு துளசிதாசர் தமிழகத்திற்கு திருவள்ளுவர்-பிரதமர் மோடி ..

modi - 2026

காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர் என காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்..

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி-தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றார். “வணக்கம் காசி” “வணக்கம் தமிழ்நாடு” என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார். உத்தரப் பிரதேசத்தில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

PTI11 19 2022 000115B 1 - 2026

காசி-தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன். நாடு பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. காசியும் தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியை போன்று தமிழ்நாடும் பழமை, கலசாரம் கொண்டது.

தமிழ்நாட்டின் பண்பாட்டை காட்டும் கோவில் காசியில் உள்ளது. காசிக்கு துளசிதாசர் என்றால் தமிழகத்திற்கு திருவள்ளூவர். காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது. பாரதியார் காசியில் பயின்றார், பல ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார் – காசி பட்டு போல, காஞ்சிபுரம் பட்டும் சிறப்பு வாய்ந்தது. தமிழக திருமணங்களில் காசியாத்திரை என்ற வழக்கம் உண்டு. காசியும் தமிழ்நாடும் திருக்கோவில்களுக்கு பெருமை பெற்றவை. சமஸ்கிருதத்தில் காசியும், தமிழ் மொழியில் தமிழ்நாடும் சிறந்து விளங்குகிறது. பல வேற்றுமைகளைக் கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவைக் கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் வேர்களை பாதுகாக்க முடியும் என்றார்.

- 2026

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம், டிச.19 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.
‘ஜனனி ஜனனி ஜகம் நீ..’ இளையராஜாவின் பாடலில் தாளம் போட்டு பிரதமர் மோடி ரசித்தார்.

பாரதியாரின் கனவை நிறைவேற்றும் நிகழ்ச்சி தமிழ் சங்கமம் – மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாரணாசி, இந்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புனித பூமி ஆன வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசிக்கும் தமிழகத்துக்கு உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் என்றார்.

ilaiyaraja sang kashi2.jpeg 1 1 - 2026

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா எம்.பி. பேசும் போது கூறியதாவது: பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். நதிநீர் இணைப்பு திட்டத்தை அன்றே பாடினார் பாரதியார். தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி; காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories