ரூ.2 கோடி மதிப்பிலான கடத்தல் செம்மரம் பறிமுதல்- 44 பேர் கைது..

1800173 redsandalwood - 2026

திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 44 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் செம்மரம் கடத்தி செல்வதாக திருப்பதி எஸ்.பி.பரமேஸ்வரர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. ராமராஜூ மேற்பார்வையில் பாக்ராப்பேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம், புத்தூர் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், வடமால பேட்டை ராமாஞ்ச நேயலு, நாராயண வனம் எஸ்.ஐ பரமேஷ் நாயக் உள்ளிட்ட போலீசார் 2 குழுக்களாக பிரிந்து திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி கார் மற்றும் 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. திடீரென போலீசாரை பார்த்ததும் வாகனங்களில் இருந்து சிலர் கீழே குதித்து ஓட முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் 2 டிரைவர்கள் மற்றும் 42 கூலி தொழிலாளர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தப்பிச் சென்றனர். லாரியில் இருந்து 11 கோடாரிகள், 32 ரம்பம், 2 லாரி, 1 கார், 2.6 டன் எடை கொண்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 81 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகள் கூலி தொழிலாளர்களை சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று செம்மரங்களை வெட்டி சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பெரிய கடத்தல்காரர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வடமாலைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories