
- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
எதிர்பார்த்தபடியே இன்று 05.12.2022 காலை 0530 மணிக்கு தெற்கு அந்தமான்-மலாக்கா ஜலசந்தி அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை (Low Pressure area) உருவாகியிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக (Depression) வலுப்பெறும். இது மேலும் வலுவடைந்து புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் வருகின்ற 7, 8, 9ஆம் தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 8 மற்றும் 9 தேதிகளில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது.
புயலைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
டார்ஸ்லைட், தீப்பெட்டி, உணவுப் பொருட்கள், சிறு குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருள்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கோள்ளுங்கள்.
6ஆம் தேதி முதல் மீனவர்கள் கடல்மேல் செல்வதைத் தவிர்க்கவும்.
8 மற்றும் 9 தேதிகளில் பயணங்களைத் தவிர்க்கவும். வெளி மைதானங்கள் கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதைத் தவிர்க்கவும்.