நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற முயன்ற ஹிந்து முன்னணியினர் கைது!

kadeswara subramaniam hindu munnani - 2026

கார்த்திதை தீபம் ஏற்ற ஆளும் திமுக அரசின் போலீஸார் விதித்த தடையை மீறிச் சென்ற காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையிலான 300 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநிலத் தலைவர் காடேஸ்வரர சுப்பிரமணியம் தலைமையில் 140 பெண்கள் உள்பட 800 பேர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர். போலீஸாரின் தடையை மீறி, ஊர்வலம் சென்ற 300 இந்து முன்னணியினரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் பல்வேறு வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கோவில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டும் காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் அறநிலையத்துறை சார்பில் ஏற்றப்படுகிறது.

thirupparankundram hindumunnani villakku - 2026

இதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் எனக்கூறியும் திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் ஆர்பாட்டம் செய்தனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில் குமார். துணை ஆணையர் சீனிவாச பெருமாள் அகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவிலைச்சுற்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்பாட்டம் நடத்திய பின்பு தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து, காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் களிடம் கூறுகையில்
கடந்த 20 வருடங்களாக காந்திகை தீபம் ஏற்ற போராடுகிறோம். உயர் நீதி மன்ற உத்தரவினை, அறநிலையத்துறையோ, காவல்துறை செயல் படுத்தாமல் கார்த்திகை தீபம் ஏற்ற தடை செய்கிறது. உயர்நீதிமன்ற உத்திரவினை செயல்படுத்த கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். அதிமுக.திமுக., இரு கட்சிகளுமே இந்து விரோத ஆட்சிதான் நடைபெறுகிறது.

மதசார்பின்மை என கூறி இந்து கோயில்களை இடிக்கிறது. ஆட்சிமாற்றத்துடன் வரும் 26ல் தடையை மீறி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories