சூதாட்டத்தில் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண்!

லுடோ சூதாட்டத்தில் வீட்டு உரிமையாளரிடம் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண்ணை மீட்டுதரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லுடோ என்ற சூதாட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான பலகை விளையாட்டுகளில் ஒன்றாகும். பகடைகளை உருட்டுவதும், காய்களை நகர்த்துவதும், அந்தந்த நிறத்தின் வீட்டை அடையும் வகையில் விளையாடுவது ஆகும். வழியைத் தடுப்பதும், மற்றவர்களின் ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்க மற்றவர்களின் துண்டுகளை வெட்டுவதும் லுடோவின் எதிர் விளையாட்டாகும். ஆன்லைன் கேமிங் அரங்கில் குடும்பம், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அந்நியர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் சவால் விட்டு விளையாடக்கூடிய விளையாட்டு இதுவாகும்.ஆன்லைனில் கூட இதை விளையாட வசதி வந்துவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் விசித்திரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் தாய விளையாட்டுக்கு அடிமையாகி தன்னைத்தானே அடகுவைத்து விளையாடியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள நாகர் கோட்வாலி அருகே அமைந்துள்ளது தேவ்கலி என்ற தேவ்கலி என்ற கிராமம். இங்கு ரேணு என்ற பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கணவர் உமேஷ் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்த பணத்தை வீட்டு செலவுக்காக மனைவிக்கு தினமும் அனுப்பி வந்துள்ளார். ஆனால் வீட்டில் தனியாக இருந்த மனைவி அந்த பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் ‘லுடோ’ விளையாடி வந்துள்ளார். இப்படியே தனது கணவர் அனுப்பிய பணத்தை முழுவதும், சூதாட்டத்தில் தொலைத்த அந்த பெண், இறுதியாக தன்னையே பணயமாக வைத்து விளையாடி வந்துள்ளார்.

அப்போதும் இவர் தோற்றதால், வீட்டின் உரிமையாளருடன் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். அந்த விளையாட்டில் தோற்றுவிட அவர் வீட்டின் உரிமையாளருடனேயே வாழ ஆரம்பித்துவிட்டார் இது தொடர்பாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், “எனது மனைவி லுடோவில் தோற்றதால், எதிராக விளையாடியவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

images 65 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories