தாய், மனைவி, சகோதரரைக் கொன்று விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

murderநாமக்கல்: நாமக்கல் அருகே தாய், மனைவி, சகோதரர் என 3 பேரைக் கொன்ற விவசாயி, தனது நிலத்தை ஏழைகளுக்குக் கொடுத்து விடும்படி கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் மூலக்காடு பகுதியை சேர்ந்த நஞ்சப்ப கவுண்டர் என்பவரது மனைவி செட்டியம்மாள் (75). நஞ்சப்ப கவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செட்டியம்மாள் தனது மகன்கள் காளியண்ணன் (55), பழனிவேல் (48) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்தும், கறவை மாடுகளை வளர்த்தும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட காளியண்ணன் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. பழனிவேலுக்கு செல்வம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் கரூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (45) என்பவரை பழனிவேல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாட்டு தொழுவத்தில் காளியண்ணன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் செட்டியம்மாளும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கிருஷ்ணவேணியும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகில் இருந்த தானியங்கள் சேமிக்கும் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கியதை அக்கம்பக்கத்தினர் கண்டனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் தேடியபோது, ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் சொத்துக்களை அனாதை இல்லங்களுக்கு கொடுக்கவும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடிதத்தில் உள்ள மற்ற விவரங்களைத் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இவரது தற்கொலைக்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories