
இந்த ஆண்டு மகரவிளக்குத் திருவிழாவில், பந்தளம் வலியகோயிக்கல் மகரம் திருநாள் ராகவ வர்மாவின் பிரதிநிதியாக ஊட்டுபுற த்ரிக்கேட்டை திருநாள் ராஜராஜவர்மா மன்னர் பிரதிநிதியாக உடைவாள் ஏந்தி செல்ல திருவாபரண பெட்டிகளுடன் வரும் ஜனவரி 12ல் பந்தளம் அரண்மனை வழியக்கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் இருந்து நடைபயணமாக திருவாபரணம் எடுத்து செல்லப்படும்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு நடைபெறும் மகரஜோதி திருவிழாவில் திருவாபரணம் கொண்டு செல்லும் பந்தள மன்னர் பிரதிநிதியாக இராஜராஜ வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் வரும் 12ஆம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து உடைவாள் எடுத்து செல்ல திருபாவரணங்கள் நடை பயணமாக சபரிமலைக்கு செல்லும் வரும் 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மகரஜோதி நாளில் மாலை தங்க திருவாரணங்கள் அணிவித்து தீபாரதனை வழிபாடு நடைபெற பொன்னம்பலமேட்டில் ஜோதி ரூபமா சுவாமி தரிசனம் தருவார்.

சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா டிசம்பர் 27 முடிவு பெற்று இரவு நடை அடைக்கப்பட்டது .சபரிமலை மகரஜோதி விழாவுக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும் அன்று ஐயப்பனுக்கு வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது இரவு நடை அடைக்கப்படும் 31ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு தந்திரி முன்னிலையில் மேல் சாந்தி நடை திறந்து வைக்க மகரஜோதி பெருவிழா துவங்கி நடைபெறும்.
விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் ஜனவரி 14 மகரஜோதி தரிசனம் நடைபெறும் .இதற்காக சபரிமலை ஐயப்பனுக்கு திருவாபுரணங்கள் அணிவிப்பதற்காக மகரஜோதி திருபாவரணங்கள் பந்தள அரண்மனையில் இருந்து வரும் ஜனவரி 12ஆம் தேதி நடை பயணமாக மூன்று நாட்கள் மலைவழிப் பாதையில் தலைசுமையில் நடந்தே சென்று எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு அனுவிக்கப்படும்.
வரும் ஜனவரி 12ஆம் தேதி பந்தள அரண்மனையில் அதிகாலை 5 மணி முதல் மகரஜோதி திருபாவரணங்கள் பந்தளம் வழியே கோவில் ஐயப்பன் முன்பு பக்தர்கள் பார்வைக்காக எடுத்து வைக்கப்படும் .
மதியம் உச்சி பூஜை நிறைவடைந்ததும் இந்த ஆண்டுக்கான சபரிமலை திருப்பாவரண பந்தள மன்னர் பிரதி ராஜ ராஜ வர்மா உடைவாள் ஏந்தி செல்ல சபரிமலை ஐயப்பனுக்குரிய தங்க திருப்பாபரணங்கள் கொடி பட்டம் மற்றும் பூஜை பொருட்கள் அடங்கிய மூன்று திருபாவரண பெட்டிகளை 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் நடைபயணமாகவே எடுத்து செல்வார்கள். வரும் ஜனவரி 14ஆம் தேதி சபரிமலை வரும் திருபாவரண பெட்டிகளை சபரிமலை தேவஸ்தானம் வரவேற்று மேல் சாந்தியிடம் ஒப்படைப்பாக மேல் சாந்தி சபரிமலை ஐயப்பனுக்கு தங்க திருப்பாபரணங்கள் அணிவித்து பூஜை வழிபாடு நடத்த சுவாமி ராஜாவாக காட்சி தருவார்.
எதிரில் உள்ள பொன்னம்பலம் மேட்டில் மகர சங்கராந்தி நட்சத்திரம் உதிக்க ஜோதி தரிசனம் மூன்று முறை தெரியும் இதற்கான ஏற்பாடுகளை சபரிமலை தேவஸ்தானம் திருவாங்கூர் தேவசம்போர்டு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் சபரிமலையில் மகரஜோதி விழாவுக்காக பக்தர்களை வரவேற்க கோயில் சுத்தம் செய்யும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.
