திருமலையில் 2022 இல் தரிசனம் செய்த 2.54 கோடி பக்தர்கள்-மொத்த வருமானம் ரூ.1,446.05 கோடி..

images 28 3 - 2026

திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் இந்த ஆண்டு சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தியதால் வருமானம் அதிகரித்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோது ஜனவரியில் ரூ.79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ.79.33 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் அதிகரித்ததுடன் ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்களை மீண்டும் தொடங்கினர்.

இதனால் பக்தர்களின் எண்ணிக்கையும் உண்டியல் காணிக்கையின் வருமானமும் கொரோனா காலத்திற்கு முன்பை விட அதிகமாகக் குவியத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக மார்ச் மாதம் ரூ.128.64 கோடியும், ஏப்ரலில் ரூ.127.65 கோடியும், மே மாதத்தில் ரூ130.34 கோடியும், ஜூன் மாதம் ரூ.123.74 கோடியும், ஜூலையில் ரூ.139.33 கோடியும், ஆகஸ்டில் ரூ.140.34 கோடியாக காணிக்கை கிடைத்தது. ஒரே மாதத்தில் இந்த வருவாய் என்பது தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக கிடைத்தது.

செப்டம்பரில் ரூ.122.19 கோடி, அக்டோபரில் ரூ.122.83 கோடி, நவம்பரில் ரூ.127.31, டிசம்பரில் (30ம் தேதி வரை) உண்டியல் வருமானம் ரூ.125.19 கோடி. இந்த ஆண்டு மொத்த வருமானம் சுமார் ரூ.1,446.05 கோடியாக வருவாய் கிடைத்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2022-23 ஆண்டு பட்ஜெட்டில் உண்டியலின் வருவாய் ரூ.1000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரியில் 9,96,093 பக்தர்களும், பிப்ரவரியில் 10,95,724 , மார்ச்சில் 19,72,741 , ஏப்ரலில் 20,64,915 , மே மாதத்தில் 22,61,641 , ஜூன் மாதம் 23,23,421, ஜூலையில் 23,40,229 ஆகஸ்டில் 22,22,184 , செப்டம்பரில் 21,12,254, அக்டோபரில் 22,74,265, நவம்பரில் 20,77,816, டிசம்பரில் 19,47,361 பக்தர்கள் (30 ம்  தேதி வரை), மொத்தம் சுமார் 2.54 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், சுமார் 11.42 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories