images 27 1 - 2026

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..

சற்றுமுன்
images 27 1 - 2026

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் பெண்களுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும். பெரும்பாலும் முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால், தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,130-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ வெள்ளியின் விலை 74,300 க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.