15 வயது சிறுமியை காதல் என ஏமாற்றி நண்பர்களோடு கூட்டு பாலியல் வன்கொடுமை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்

vankodumai 1 - 2026

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயால் நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமிக்கும் அதே பகுதியில் தண்ணீர் கேன் போடும் சதீஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக சதீஷ்குமார் கூற அதை நம்பிய சிறுமி அவருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இதை தொடர்ந்து சிறுமியை சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்த சதீஷ்குமார், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் வினோத், ராஜா ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

dogs - 2026

சுமார் 2 வார காலம் சிறுமியை இந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதனிடையே சிறுமியை காணவில்லை என போலீசில் அவரது உறவினர்கள் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் நேற்று முன்தினம் இரவு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். இதை தொடர்ந்து சதீஷ்குமார், அவரது நண்பர்கள் வினோத், ராஜா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.