ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்..

images 56 - 2026

ஜம்மு காஷ்மீரில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நால்வர் பலியான நிலையில் இன்று குண்டுவெடிப்பு நடந்ததால் தேசிய புலனாய்வு அமைப்பு காஷ்மீர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்து சென்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட டாங்கிரி கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், அங்கிருந்த 3 வீடுகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய டாங்கிரி கிராமத்தில், அதிகாலை கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், மற்றொரு கண்ணி வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணி வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து ராணுவம், துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

காடுகளில் புகுந்தும், ட்ரோன்கள் மூலமாகவும் தீவிரவாதிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது.

நிவாரணம் அறிவிப்பு
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், குடும்பத்தின் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

mcms 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories