December 6, 2025, 3:55 AM
24.9 C
Chennai

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி வெறும் அறிவிப்பு தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

images 82 - 2025

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என கடந்த ஆட்சியில் வெறுமனே அறிவித்து விட்டுச் சென்று விட்டனர். அரசாணை வெளியிடவில்லையென மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதுநகரில் இன்று தெரிவித்துள்ளார்.


விருதுநகர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் ரூ.20 இலட்சம் செலவில் கட்டப்பட்ட செவல்பட்டி புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் திறந்து வைத்தார்.
ரூ.50 இலட்சம் செலவில் காரியாபட்டி மற்றும் புதுப்பட்டி பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக 2 புதிய அவசர கால ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 150 மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி அணிவித்தார்.
இந்நிகழ்வின் போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
பின்பு, நடைபெற்ற பத்திரிக்கையளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது :

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் மருத்துவனையில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுளளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச் சத்து குறைவாக உள்ள 600 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு அவர்களின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படும் எடுத்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்புகள் எவ்வளவு என்ற கேள்விக்கு
தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீதமும், 2வது தவணை 92 சதவீதத்தை கடந்தள்ளது. ஒன்றிய அரசு 3 மாதங்களாக தடுப்பூசி சப்ளை மற்றும் தயாரிப்புகளை நிறுத்தி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை 3 லட்சம் கையிருப்பு உள்ளது. 2லட்சத்து 60 ஆயிரம் கோவிக்சின், 40 ஆயிரம் கோவிஷீல்டு கையிருப்பு உள்ளது.

முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கின் வழியாக செலுத்தும் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்தை தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எனவும் தெரிவித்தார்.
பல்மருத்துவக் கல்லுரி விருதுநகரில் தொடங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர்,
விருதுநகரில் பல்மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என வெறுமனே அறிவித்துள்ளனர். எந்த அரசாணை வெளியிடப்படவில்லை. தமிழக முதல்வர், பல்மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி ஆகியவை எந்தெந்த இடங்களில் தேவை என்பதை ஏற்கனவே மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னையில் ஒன்று உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்று தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு தேவை இருக்கும் இடத்தில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதே என்ற கேள்விக்கு,
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலத்தடி நீரும் இல்லை. குடிநீர் இல்லை. அந்த இடத்தில் தொடங்கி விட்டனர். அங்கு மருத்துவமனை இயங்க முடியாமல் இருந்ததற்கு காரணம், குடிநீர் இல்லாமல் தான். எனவே, தமிழக முதல்வர், காவிரியில் இருந்து பிரதான குழாய் மூலம் குடிநீர் கொண்டு வர ரூ.9 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். இதேநிலை தான் நாகப்பட்டிணம் மாவட்டத்திலும். எனவே, விருதுநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் கொண்டு வர அமைச்சர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியிடம் காலியாக உள்ளதே என்ற கேள்விக்கு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1021 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளன. மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அது முடிந்தவுடன் பணிநியமனம் நடைபெறும் என்றார்.
பணி நீக்கம் செய்த 2300 செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்த கேள்விக்கு கொரோனா காலத்தில் பணியாற்றிய 2300 செவிலியர்கள் சான்றிதழ் சாரிபார்ப்பு மற்றும் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் 2020 ஏப்ரலில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றங்கள் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இல்லாதவர்களை நியமனங்களை ஏற்கக் கூடாது என கூறியுள்ளது. இருப்பினும் பேரிடர் காலத்தில் பணியாற்றியதால் அவர்களுடைய பணிபாதிப்பு இருக்கக் கூடாது எனவும். ரூ.14 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கி அந்தெந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய மருத்துவமனைகள் மற்றும் மக்களைத்தேடி மருத்துவம் ஆகிய பணியிடங்களில் அவர்கள் நிரப்பப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories