
கேரளா மாநிலத்தில் இடுக்கி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் வீட்டின் மீது கவிழ்ந்தது. 16 பேர் காயமடைந்தனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இடுக்கி கட்டப்பனாவில் இந்த விபத்து நடந்துள்ளது. செங்குத்தான இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் வீட்டின் மேல் கவிழ்ந்தது.விபத்து நடந்த உடன் இடுக்கி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மண்டல காலத்தில் இருந்து இங்கு நடக்கும் 3வது விபத்து இதுவாகும்.
ஏற்கனவே பத்தனம்திட்டா வில் இருந்து பம்பை செல்லும் வழியில் லாஹா விளக்கு அருகே கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் கவிந்தது.யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.சபரிமலை சாலையில் லாஹாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து கவிழ்ந்தது. பம்பையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் பெருநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.





