ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு‌ பொதுமக்கள் போராட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் உள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிர்த்தான் ஊராட்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலத்துறை கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலையில் வடுகப்பட்டி முதல் தெற்கு வெங்காநல்லூர் வரையிலான 36 கிலோமீட்டர் நெடுஞ்சாலை பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவித்தான் ஊராட்சியில் கல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்குவாரி அமைப்பதற்கு இந்தப் பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

56 ஏக்கர் பரப்பளவில் கல்குவாரி அமையும் இடத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டு இயந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்பு மற்றும் விலை நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முருகன் என்ற விவசாயி, எள் அறுவடை செய்வதற்காக தொழிலாளர்களை அழைத்துச் சென்றார். அப்போது கல்குவாரியின் நுழைவாயிலை அடைத்து இவ்வழியாக செல்ல கூடாது என காவலாளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டித்து அச்சம் தவிர்த்தான் மற்றும் நரியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்குவாரி நுழைவாயிலின் முன்னமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியர் நேரில் வந்து விவசாய நிலங்களுக்குச் செல்ல உரிய பாதை வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே இவ்விடத்தை விட்டு செல்வோம் என்று கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories