திருப்பதி கோயிலில் ஜன 1 முதல் 11 வரை காணிக்கை வருவாய் ரூ.42.88 கோடி..

images 51 1 - 2026

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 முதல் நேற்று வரை உண்டியல் காணிக்கையாக ரூ.42.88 கோடி கிடைத்துள்ளது. திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுவதைப் போல மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் ஏழுமலையானை வழிபடும் பக்தர்கள் அனைவரும் கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 முதல் நேற்று வரை உண்டியல் காணிக்கையாக ரூ.42.88 கோடி கிடைத்துள்ளது. 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து காணிக்கை செலுத்தியுள்ளனர். ஜனவரி 1 மற்றும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் உள்பட 11 நாளில் ரூ.42 கோடி உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திறக்கப்பட்ட சொர்க்கவாசல் நேற்று நள்ளிரவு மூடப்பட்டது. 2.10 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக 6.5 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். மீண்டும் அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories