வரும் மே 24 ல் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..

சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24 -ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தேதி அறிவித்துள்ளார்.

திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் தேவஸ்தானம் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்கு லிங்கம் ,மூர்த்தம் சங்கமம், ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள் புரிந்து வருகிறார். கோவிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலை பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந் நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் பாலாஸ்தாபனம் செய்யப்பட்டு தொடங்கியது.

கோயிலில் உள்ள சுவாமி அம்மன் சன்னதிகள், ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரம் , விமானங்கள், சட்டநாதர் மலை சன்னதி, திருஞான சம்பந்தர் சன்னதி மற்றும் உள் பிரகாரங்கள் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டது. பணிகள் மற்றும் புதிய சந்ததிகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோவில் திருப்பணிகள் ரூபாய் பத்து கோடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் மே மாதம் 24 ஆம் தேதி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை தருமபுரம் ஆதீனம் அறிவித்தார். சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமாக சன்னிதானம் மே மாதம் 24 ஆம் தேதி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி பரிவார சுவாமிகள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கூறினார். மேலும் சீர்காழி தமிழ் சங்கத்தையும் தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

IMG 20230113 WA0085 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories