சபரிமலை பொன்னம்பலம் மேட்டில் வானில் நட்சத்திரம் உதிக்க ஜோதி தரிசனம்..

1092998 ayyappan - 2026
சபரிமலை பொன்னம்பலம் மேட்டில் வானில் நட்சத்திரம் உதிக்க ஜோதி தரிசனம்
500x300 1821768 sabarimala2 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிகர நிகழ்ச்சியாக ஐயப்பனுக்கு இன்று திருபாவரணங்கள் அணிவித்து மகரவிளக்கு பூஜை நடந்தது.எதிரே பொன்னம்பலம் மேட்டில் வானில் நட்சத்திரம் உதிக்க ஜோதி தரிசனம் இன்று தெரிந்தது.

மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

FB IMG 1673703075387 - 2026
ஜோதி தரிசனம் பார்க்க கூடிய பக்தர்கள்

இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடந்தது. இதனையொட்டி இன்று மாலை 6.30 மணியளவில் பந்தள அரண்மனையில் இருந்து ஆபரண பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் எழுப்பி மகர ஜோதியை தரிசனம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மகர ஜோதி தரிசனத்தை காண வந்த பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சன்னிதானத்தை சுற்றி சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்திருந்தனர். மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியிலும் குவிந்திருந்தனர். அவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

FB IMG 1673703002905 - 2026
சபரிமலைக்கு பாதுகாப்புடன் வந்த திருபாவரணபெட்டிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories