ஆளுநரின் தேநீர் விருந்து – முதலமைச்சர் அமைச்சர்கள் பங்கேற்பு..

934509 - 2026

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தேநீர் விருந்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் காலையில் மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைப்பது வழக்கம். அன்று மாலையில், சென்னை, கிண்டியில் உள்ள தன்னுடைய மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

Tamil News large 3226644 - 2026

அதன்படி, இந்தாண்டும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் நேற்று மாலை தொடர்பு கொண்டு, இன்று மாலை குடியரசு தின விழாவுக்காக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநரின் செயலாளர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழையும் வழங்கினார். இந்நிலையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் ஆளுனருடன் சிறிது நேரம் உரையாடினார். முதல்வர் உரையாடிய போது துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, இடதுசாரிகள், விசிக, தவாக, உள்ளிட்ட காட்சிகள் புறக்கணித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியூரில் இருந்ததால் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

16747363783079 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories