ஈரோடு அதிமுக வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும்-இபிஎஸ்..

IMG 20230210 WA0014 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் .தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் என   ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தி.மு.க. ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஈரோட்டில் நடைபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுகக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றனர்.

காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள். எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் வைப்பதற்கு பதில் ரூ.2 கோடிக்கு வைக்கலாமே. பேனா சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கலைஞர் நினைவு இடத்தில் வைத்தால் என்ன?

தி.மு.க. ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் பயத்தினால் தி.மு.க. 20 அமைச்சர்களை களத்தில் இறக்கியுள்ளனர். எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம். ஆனால் ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள்.

images 2023 02 10T061655.513 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதியில் விடியாத அரசு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. எங்கே பார்த்தாலும் ரவுடியிஸம் , கட்ட பஞ்சாயத்து, மது விற்பனை தலைத்தூக்கி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளி தொழில் நிறைந்ததாக இருக்கிறது. அதனால் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு விசைத்தறி உற்பத்தியாளர்கள், அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது.திமுக ஆட்சஆனால் திமுக ஆட்சியில் பொறுப்பேற்றவுடனேயே இலவச வேட்டி சேலை வழங்கவில்லை. இதனால் விசைத் தறி கூடங்கள் வேலையில்லாமல் மூடப்பட்டு விட்டன. அங்கிருந்த தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் செய்ய சென்றுவிட்டார்கள்.

மின் கட்டண உயர்வை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. சொத்து வரியும் உயர்ந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 என்ற திமுக வாக்குறுதியை திமுக அடியோடு மறந்துவிட்டது. தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், இலவச மடிக்கணி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டது.

நீட் தேர்வு வாக்குறுதி ரத்து என்றார்கள். அதை ஏன் நிறைவேற்றவில்லை. இனியும் திமுக மக்களை ஏமாற்ற வேண்டாம். எழுதாத பேனாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுபபில் ரூ 500 கோடி ஊழல் நடந்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. திமுகவின் பயமே நமக்கான வெற்றி. ஈரோடு மாவட்ட எஸ்பி, திமுக மாவட்டச் செயலாளர் போல் செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமையை சரிசெய்வோம் என்றனர். இன்று ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ரூ.1.62 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது. முதலமைச்சருக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories