ராணுவ வீரர் கொலை: திமுக கவுன்சிலர், போலீஸ் உள்பட 9 பேர் கைது!

images 2023 02 16T144719.364 - 2026

கிருஷ்ணகிரி அருகே உள்ளூர் கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயம் அடைந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி திமுக கவுன்சிலர், ஒரு போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் பிரபு .பிரபாகரனும், அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி திமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி இது குடிநீர் இதில் ஏன் துணி துவைக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறதுஅதற்கு பிரபாகரன் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் போதே அங்கு வந்த பிரபாகரனின் தாய் எதோ சொல்ல, சின்னசாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் அன்று மாலையில் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குரு சூர்யமூர்த்தி குணாநிதி ராஜபாண்டியன் அங்கு வந்து பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு மற்றும் தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது .இந்த தாக்குதலில் 3 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி மற்றும் மணிகண்டன் மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன் ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை போலீஸார் தேடி வந்தனர் .இந்நிலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு இறந்தார்.

இதையடுத்து பிரபு கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றி தலைமறைவான ஒன்பது சந்தேக நபர்களையும் தேடினர்.

இதில் முதலாவதாக குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன்,வேடியப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் குருசூர்யமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். குணாநிதி கல்லூரி மாணவர் ஆவார்.

இவர்களை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories