அதானி குழும புகாரை விசாரிக்க குழு- முடிவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..

1789103 courtd 1 - 2026

அதானி குழுமம் மீதான புகார்களை விசாரிப்பதற்கு குழு அமைக்கக் கோரிய மனு மீதான முடிவை இன்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது .

அதானி குழுமம் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க அமைப்பு ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரிக்க மனு அளிக்கப்பட்டிருந்தது.

அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ ஆகியன பெருந்தொகையை முதலீடு செய்திருப்பது பற்றியும் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ரூ.1800க்கு அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விற்றபோது ரூ.3200 க்கு வாங்க எஸ்பிஐயும், எல்ஐசியும் விண்ணப்பித்ததாகவும் மக்கள் பணம் பல லட்சம் கோடியை அதானி குழுமம் அபகரித்து விட்டதாகவும் மனுவில் ஜெயா தாக்குர் குற்றம்சாட்டியுள்ளார்.

images 2023 02 17T184004.036 - 2026

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேக்தாவும், அதானி நிறுவனத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் வாதம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அதானி குழுமம் மீதான புகார்களை விசாரிப்பதற்கு குழு அமைக்கக் கோரிய மனு மீதான முடிவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

அதானி விவகாரம் தொடர்பாக சீலிட்ட உரையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலை ஏற்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதானி குழும நிறுவனங்கள் தொடர்பான வழக்கு வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கமளித்துள்ளார்.

அதானி குழுமம் மீதான முறைகேடுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை தேவை என்று பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

பங்குச்சந்தையை வளைத்து தமது நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக அதானி குழுமம் உயர்த்தியதாக புகார் எழுந்த நிலையில் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியதாக கூறப்படும் புகாரையும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழுமங்களில் பணம் முதலீடு என ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.

செபி விதிகளுக்கு மாறாக அதானி குழும நிறுவனர்களிடம் அதிக சதவீத பங்குகள் இருந்ததாகவும் பிரசாந்த் பூஷண் புகார் அளித்தார்.

அதானி குழுமத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் புகார் கூறினார். அதானி குழும செயல்பாடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் விசாரணை தொடங்கியது.

அதானி குழுமப் பங்குகள் 40-50 மடங்கு விலை உயர செபியும் உடந்தையாக இருந்துள்ளதாக பிரசாந்த் பூஷண் குற்றசாட்டு வைத்துள்ளார்.

செபி மீது பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒழுங்காற்று அமைப்புகள் தவறிவிட்டன என்ற யூகத்தின் அடிப்படையில் விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் விளக்கமளித்தார்.

அதானி குழுமம், கெளதம் அதானி, அவரது சகோதரர் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் பிரசாந்த் பூஷண் வாதம் வைத்தார். சிபிஐ, அமலாக்கபிரிவு உள்பட 9 அரசு அமைப்புகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் வலியுறுத்தினார்.

நிபுணர் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் செபியின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு, உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைப்பதில் ஆட்சேபம் இல்லை என செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிபுணர் குழு அமைக்கும் விவகாரத்தில் ஆட்சேபம் இல்லை என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் சீலிடப்பட்ட பரிந்துரை கடிதம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக சில பரிந்துரைகளை அரசு அதில் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டது.இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதனை திருப்பி அளித்துவிட்டது.

இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் நலன் கருதி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜெ.பி. பர்திவாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு தெரிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories