மாநில அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர் கவர்னர்-உச்சநீதிமன்றம்..

1789103 courtd 2 - 2026

மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு உட்பட்டவர் கவர்னர் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட கவர்னர் அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தியதைக் கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

பஞ்சாபில் மார்ச் 3ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. 
இதற்காக பஞ்சாப் கவர்னரான பன்வாரிலால் புரோஹித்துக்கு அமைச்சர்கள் குழு ஆவணங்கள் அளித்து அனுமதி கோரியிருந்தனர். ஆனால், கவர்னர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அதில், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த கவர்னர் தரப்பில் ஏற்கெனவே ஆளுநர் அனுமதி அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கவர்னர் என்ன விவரங்களைக் கேட்கிறாரோ அதனை மாநில அரசு வழங்க வேண்டும். அதேபோன்று மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் உட்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

அரசியல் கொள்கைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த பணி என்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories