ஈரோடு -இடைத்தேர்தல் ஜெயிக்கப்போவது யார்?..

erd28prot 2802chn 124 3 - 2026

ஜெயிக்கப்போவது யார் இளங்கோவனா தென்னரசா ?ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கி ஒருமணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியும் முடிவுகள் பிற்பகல் உங்கள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும்.

500x300 1843412 police - 2026

இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராக்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது.

மூடி முத்திரையிடப்பட்ட காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வி.வி.பேட் கருவிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. காப்பு மையத்தின் உள்ளே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை சுற்றி துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்புப்படை துப்பாக்கி ஏந்திய வீரர்கள், ஆயதப்படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என்று மொத்தம் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை சீல் திறக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மதியம் தெரியும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகமாக இருப்பதால் 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 15 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். எனவே மதியத்துக்குள் முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்? என்பது இன்று மதியம் தெரிந்து விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories