December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

அதானி – விசாரணைக்கு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்..

vrfrfr - 2025

அதானி – ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றம், பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதானி குழும பங்குகளின் விலை மிகைப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி குழு பங்குகள்100 பில்லியன் டாலா் அளவுக்கு சரிவடைந்தன.
அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடு உள்ளதால் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில், அதானி- ஹிண்டன்பா்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்று விஷால் திவாரியும், அதானி பங்குகள் செயற்கையாக சரிவடைய காரணமான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஷா்மாவும் என மொத்தம் நான்கு போ் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை பிப். 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, பங்குச் சந்தையில் முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தது. இதை மத்திய அரசும் ஒப்புக் கொண்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருகிறது. நிபுணா் குழு அமைப்பதால் பங்குச் சந்தை முதலீடுகள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. ஆகையால், நிபுணா் குழு விவரம் சீலிடப்பட்ட உறையில் அளிக்கப்பட்டுள்ளது. நிபுணா் குழுவை நீதிபதி மேற்பாா்வையிடுவதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘மத்திய அரசு சீலிடப்பட்ட உறையில் அளித்துள்ள பெயா்களை ஏற்றுக் கொண்டால், எதிா்தரப்பினருக்கு அந்த விவரம் தெரியாமல் போய்விடும். முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

ஆகையால், நிபுணா் குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும். இது குழுவின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கலாம். ஆனால், தினந்தோறும் புதிது புதிதாக அமா்வுகளை உருவாக்குவதில் பிரச்னை உள்ளது. ஆகையால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்து தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories