அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம் -அண்ணாமலை..

அதிமுக ஒன்றுசேராததே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானது. இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளதால் இளங்கோவன் வெற்றி உறுதியானது. இன்னும் 3 சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ள நிலையில் 55,534 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

1150126 annamalai - 2026

இதுவரை வெளியான முடிவுகள்படி 91,066 வாக்குகள் பெற்று இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். பாஜக – அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஒன்றுசேராததே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும், யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பிரச்னை எழுந்தது. கட்சி சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சையாக போட்டியிட வேண்டுமா என்பதிலும் குழப்பம் நிலவியது. பிரச்சனையும், குழப்பமும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என கருத்து தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. பிரிந்து நிற்பதோ அல்லது இருவர் போட்டியிடுவதோ கூடாது என்று பாஜக வலியுறுத்தி வந்தது. இதை சொன்னதற்காக சிலர் எங்கள் மீது கோபப்பட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை விமர்சனம் தெரிவித்தார். இடைத்தேர்தலில் பலத்துடன் போட்டியிட வேண்டியது அவசியம் என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது‌ என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories