தர்மபுரி அருகே மின் வேலியில் சிக்கி 3 யானைகள் பலி..

images 13 - 2026

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. அவற்றை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டி இருந்தது. இந்த நிலையில், காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வனவிளங்குகள் நுழையாமல் தடுப்பதற்காக  விவசாயி முருகேசன் என்பவர் மின்வேலி அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சுற்றிக்கொண்டிருந்த 3 காட்டுயானைகள் தவறுதலாக மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

956698 - 2026

உயிர் தப்பிய 3 குட்டி யானைகள் இறந்த யானைகளை சுற்றி சுற்றி வந்தன. இது குறித்து தகவல் அறிந்த வந்த பாலக்கோடு வனத்துறையினர் யானைகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்தது பெண் யானைகள் என தெரியவந்துள்ளது.

இது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்ததில் பாறைகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் அருகே உள்ள மின்கம்பத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்ததற்காக முருகேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

images 14 - 2026

யானைகள் நடமாடும் இடத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே உயிரிழந்த யானைகளின் உடலை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த யானைகள் அருகே சுற்றித் திரியும் குட்டி யானைகள் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர்.இச்‌ சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories