இரு குழந்தைகள் தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை ..

500x300 1863413 img 20230410 wa0005 - 2026
குடும்ப பிரச்சனை இரு குழந்தைகளோடு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை

திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்சனை இரு குழந்தைகளோடு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது32) சோமாசிபாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதிக்கு லட்சகுமார் (4), உதயகுமார் (1) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். சின்னராசுக்கும் சூர்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனையில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சின்னராசு திண்டிவனத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.

கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது தாயிடம் அவர்கள் குறித்து கேட்டார். அவருக்கும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இதையடுத்து 2 பேரும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சூர்யாவின் செல்போனுக்கு போன் செய்த போது அது அங்குள்ள ஏரிக்கரையில் உள்ள கிணற்றின் அருகே இருந்து சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று தேடி பார்த்தனர்.

கிணற்றில் குதித்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் சூர்யாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளைய மகன் உதயகுமார் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். லட்சக்குமார் உடலை தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் சூர்யா, 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அந்த பகுதி பொதுமக்கள் ஏரிக்கரையில் திரண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories