February 15, 2025, 2:36 PM
30.7 C
Chennai

காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியின் போதும் சி.ஆர்.பி.எப் தேர்வு ஆங்கிலம், இந்தியில் தான் நடந்தது-பாஜக

#image_title

காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியின் போதும் சி.ஆர்.பி.எப் தேர்வு ஆங்கிலம், இந்தியில் தான் நடந்தது என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கூறியுள்ளது.சி.ஆர்.பி.எப்.ஆள் சேர்ப்பு தேர்வுகளில் இதே விதிகள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தன என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா?. அரசியலமைப்பு உரிமையை தட்டி பறித்ததை உணராத மு.க.ஸ்டாலின் தற்போது தமிழுக்காக, தமிழர்களுக்காக உருகுவது ஏன்? என தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் தி.நாராயணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் கூறி இருப்பதாவது:- சி.ஆர்.பி.எப். பணியில் ஆட் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சி.ஆர்.பி.எப்.ஆள் சேர்ப்புக்கான கணினி தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் இது தமிழக இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிப் போர் சொந்த மாநிலத்திலேயே தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது இந்தி பேசுவோருக்கு சாதகமானதாகவும், பாகுபாடு காட்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது, துணை ராணுப்படையில் தமிழர்கள் பணியாற்றும் வாய்ப்பை பறிக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு உள்ளது. இது அரசியலமைப்பு வழங்கி உள்ள உரிமையை பாதிப்பதாகவும் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளில், குறிப்பாக 2004-2014 வரையிலான சி.ஆர்.பி.எப் ஆள் சேர்ப்புக்கான அறிவிக்கைகளை ஆராய்ந்து பார்த்த போது, தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில், (உள்துறை இணை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்த போதும்) சி.ஆர்.பி.எப்.ஆள் சேர்ப்பு தேர்வுகளில் இதே விதிகள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தன என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா?.

அந்த பத்து வருடங்களில் நடைபெற்ற கணினி தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட போது தமிழக இளைஞர்கள் ஏன் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை? என்பதையும், சொந்த மாநிலத்திலேயே தாய் மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏன் ஏற்பட்டது? என்பதையும், இந்தி பேசுவோருக்கு சாதகமாக திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து கொண்டது ஏன்? என்பதையும், அன்று பாகுபாடு காட்டியது ஏன்? என்பதையும், திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழர்கள் துணை ராணுவப்படையில் பணியாற்றும் வாய்ப்பை பறித்தது ஏன்? என்பதையும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதித்து சமவாய்ப்பை மறுத்தது ஏன்? என்பதையும் தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும்.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளதால், அலுவல் மொழியான இந்தியிலோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலோ அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதாலேயே இந்த அறிவிக்கை என்பதையும் தெளிவுபட குறிப்பிட்டு உள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழக இளைஞர்கள் குறித்து கவலைப்படாத தமிழ் மொழி இல்லாதது குறித்து வருந்தாத, அரசியலமைப்பு உரிமையை தட்டி பறித்ததை உணராத மு.க.ஸ்டாலின் தற்போது தமிழுக்காக, தமிழர்க ளுக்காக உருகுவது ஏன்? அரசியல் உள்நோக்கம் தானே? காழ்ப்புணர்ச்சி தானே? இன்று கேட்பது சரி யென்றால், அன்று மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழர்களை வஞ்சி த்தது தவறு தானே? அதற்கு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பாரா முதல்வர் ஸ்டாலின் அவர்கள்? அல்லது எதற்கெடுத்தாலும் மொழி அரசியல் செய்து மக்களை தூண்டுவதை நிறுத்திக் கொள்வாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories