
சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் 120 பணியாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தரை சக்கர பட்டசுக்கான ரசாயன மூலப்பொருட்களை செலுத்தி கொண்டிருந்தபோது திடீரென ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.
வெடித்து சிதறியதில் இடையங்குளத்தை சேர்ந்த தங்கவேல் 55, கருப்பசாமி 32, ஆகிய இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் மாரித்தாய், கருப்பம்மாள் தலை மற்றும் கால் பகுதிகளில் காயம் . மேலும் வலது கால் எலும்பு முறிவு ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி அமைத்தனர் விபத்தில் இரண்டு பட்டாசு தயாரிப்பு அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து மாரனேரி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்