December 7, 2025, 7:04 PM
26.2 C
Chennai

பழங்கால நீர்த் தொட்டியில் தமிழ் கல்வெட்டு..

977384 - 2025
எட்டக்காபட்டியில் பழங்கால நீர்த் தொட்டியில் தமிழ்க் கல்வெட்டு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெம்பக்கோட்டை எட்டக்காபட்டியில் பழங்கால நீர்த் தொட்டியில் தமிழ்க் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எட்டக்காபட்டி பேருந்து நிறுத்தத்தின் அருகில் பழமையான கிணறு ஒன்று உள்ளது. அதன் வெளிப்பகுதியில் கல்தொட்டி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்தொட்டியில் பழங்கால தமிழ் கல்வெட்டு இருப்பது தெரிய வந்தது.

இதை ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான போ.கந்தசாமி ஆய்வு செய்து படிஎடுத்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

இக்கல் தொட்டியின் இடது புறத்தில் நான்கு வரிகளில் தமிழில் கல்வெட்டு எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.அதில், கல்வெட்டில் பார்த்தீப வருடம் பங்குனி மாதத்தில் சின்னச் சங்கர வன்னியன் என்பவன் பொது மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக கிணறு மூலம் நீர் இறைத்து சேகரிக்க கல்தொட்டி ஒன்று அமைத்துக் கொடுத்ததாக கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டின் தமிழ் எழுத்தமைதியைக் கொண்டு 17-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது.

250 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மக்கள் பெரும்பான்மையாக வசித்துள்ளனர். ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக கிணற்றிலிருந்து நீர் இறைத்து வெளியில் அமைந்துள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.பல ஆண்டுளாக புனிதமாக கருதப்பட்டு செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்றும் பெண்கள் தீட்டுத் காலங்களில் அருகில் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்து மீண்டும் அவ்விடத்துக்குச் சென்றபோது அந்தப் பகுதி முழுவதும் வெள்ளை, காவி நிற வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.

வரலாற்றைக் கூறும் கல்வெட்டுகள் மக்கள் பலரின் அறியாமையால் கல்வெட்டின் மீது பெயின்ட் அடிக்கக்கூடிய வழக்கம் இன்றும் பல்வேறு கோயில்களில் காணப்படுகின்றன.  இதுபோன்ற பாரம்பரியச் சின்னங்களை அழியாமல் பாதுகாக்க உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும். என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories