திஹார் சிறையில் ஸ்ரீசாந்தை கொல்ல முயற்சி நடந்ததாக குடும்பத்தினர் தகவல்

சற்றுமுன்

Sreesanthஐபில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நடத்தும் ஐபிஎல் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஸ்ரீசாந்தின் சகோதரி கணவர் மதுபாலகிருஷ்ணன். பிரபல மலையாளத் திரைப்படப் பாடகரான இவர், இன்று மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார். அதில் “திஹார் சிறையில் ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்தது. கொலைக் குற்றவாளியான தாதா ஒருவர் ஸ்ரீசாந்தை கூர்மையான கதவு போல்ட் மூலம் தாக்க முயன்றார். அதிர்ஷ்டவசமாக இதில் காயமின்றி ஸ்ரீசாந்த் தப்பினார். இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீசாந்தோ அவரது குடும்பத்தினரோ சிறை அதிகாரிகளிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இந்தத் தகவலை ஸ்ரீசாந்த் எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறினார். இருப்பினும் இந்தத் தகவல் தொடர்பாக ஸ்ரீசாந்த் எதுவும் யாரிடமும் கூறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.