
ராஜபாளையத்தில் காதல் திருமணம் செய்து 15 நாளில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதிய சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் விஜய் வயது 23 இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த பரமசிவன் மகள் கலையரசி வயது 19. கலையரசி வடக்கு மலையடிப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து செல்லும் பொழுது விஜய்க்கும் கலையரசிக்கும்காதல் மலர்ந்துள்ளது கலையரசி பள்ளியில் படித்த காலத்திலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை காதலித்து வந்துள்ளார் அப்போதே பெண் வீட்டு (கலையரசி) தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது அவ்வப்போது கலையரசி திட்டி கண்டித்து வைத்துள்ளனர் .
இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு விஜயும் கலையரசியும் திருப்பரங்குன்றத்திற்கு சென்று கோவிலில் திருமணம் செய்துள்ளனர் கலையரசியின் உறவினர்கள் மற்றும் இராஜபாளையத்தில் உள்ள கலையரசியின் பாட்டி விஜயின் வீட்டிற்கு சென்று எங்கள் மகளை உன் மகன் கூட்டிச் சென்று விட்டான் அவளை ஒப்படைக்க வேண்டும் என சண்டையிட்டுள்ளனர்.
அவளை ஒப்படைக்கவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது அதே நேரத்தில் பெண்ணின் உறவினர்கள் விஜயின் விட்டாரிடம் நண்பர்களை வைத்து மிரட்டதாகவும் கூறப்படுகிறது இதற்கிடையில் இருவரும் திருமணம் செய்து இராஜபாளையம் வந்த பொழுது கலையரசியின் அப்பா மற்றும் பாட்டி உறவினர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர் மீண்டும் இருவரும் ஊரை விட்டு வெளியே சென்றுள்ளனர் .
இந்த நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தங்களால் சேர்ந்து வாழ முடியாது எங்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறை கடிதம் எழுதிவைத்துவிட்டு இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் . உடனடியாக உறவினர்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை சேர்ந்தனர் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டதால் காதல் திருமணம் செய்த 15 தினங்களில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்




