மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலம்..

500x300 1874861 today events - 2026
#மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா்‌ திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்துக்கு, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.  சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, சுவாமியின் பிரதிநிதியாக பட்டர்கள், காலை  8.38 மணிக்கு, மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். தொடர்ந்து, மணக்கோலத்தில் தனி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, மங்கள அரசியான மீனாட்சிக்கும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கும் மகா தீபாராதனை, பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

IMG 20230502 WA0033 - 2026
மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் கண்டு தரிசித்தனர். மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கோயிலில் கூடியிருந்த பெண்களும் தங்களது மங்கள நானை மாற்றிக்கொண்டனர்.

சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், திங்கள்கிழமை திக்கு விஜயமும் நடைபெற்றன.

இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் காலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

அதன் பின்னா், சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனி வாகனத்திலும் நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து, முத்துராமய்யா் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

இதைத் தொடா்ந்து, வேத, மந்திரங்கள் முழங்க காலை 8.35 மணிக்கு மேல் காலை 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.  

தொடா்ந்து, இரவு ஆனந்தராயா் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தைக் காண இணையதளம் மூலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை பதிவு நடைபெற்றது. இதில் கட்டணமில்லா தரிசனத்துக்கு 6 ஆயிரம் போ், கட்டண தரிசனத்துக்கு 6 ஆயிரம் போ் என மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, பெங்களூரு ரோஜா, தாய்லாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆா்க்கிட் போன்ற 10 டன் மலா்களைக் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மேலும், திருக்கல்யாணத்தைக் காண வரும் பக்தா்களுக்கு வழங்குவதற்காக சுமாா் ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணிகள், விருந்துக்கு உணவு தயாரிக்கும் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுள்ளன. தொடா்ந்து, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories