
இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அழகு குட்டி தீச்சட்டி எடுத்து ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து பூக்குழி இறங்கும்போது பக்தர்கள் தவறி விழுந்து காயமடைந்தார்.

விருதுநகர் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பூக்குழி திருவிழா கடந்த மாதம் 25-ஆம் ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி சப்பரம், பூத வாகனம், பூச்சப்பரம், தண்டியல் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கியான பூக்குழி 10ம் நாள் திருவிழா முன்னிட்டு காலையில் கோயிலில் சிறப்பு யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூக்குழி திடலில் தீ வளர்க்கப்பட்டது.
மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சப்பரத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்கள் அழகு குட்டி அக்னி சட்டி எடுத்தும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பூக்குழி விழாவில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் இராஜபாளையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பூக்குழி இறங்கும் பொழுது சில பக்தர்கள் பூக்குழியில் தவறி விழுந்து காயங்களும் ஏற்பட்டது கோவில் நிர்வாகமும் போலீசாரம் வரிசையில் அனுப்பி இருந்தால் இது போன்ற காயங்கள் ஏற்பட்டிருக்காது என பக்தர்கள் கூறுகின்றனர்.





