தி கேரளா ஸ்டோரி- ஆதரவாக பேசிய பிரதமர் மோடி..

images 39 - 2026
#image_title

கர்நாடக சட்டசபை தேர்தல் – தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார் பிரதமர் மோடி. கடும் எதிர்ப்புக்கு இடையே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது. கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்திப்பட இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும் என கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், இந்தப் படம் கடும் எதிர்ப்புக்கு இடையே கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது.

சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கோவையிலும் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பல்லாரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்தப் படத்தை தான் தடைசெய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்தப் படத்தை தடைசெய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தைப் பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத போக்குடன் நிற்கிறது. வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்துள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories