Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..

நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறையும் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி, தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசரின் பால்வளத்துறை, மனோ தங்கராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.