02-06-2023 1:10 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Become a member

    Get the best offers and updates relating to Liberty Case News.

    ― Advertisement ―

    spot_img

    புதுச்சேரியில் திருமண தாம்பூல பையுடன் மது பாட்டில் 

    புதுச்சேரியில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது...
    Homeசற்றுமுன்சென்னை-ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 22 பேர் கைது

    சென்னை-ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 22 பேர் கைது

    images 96

    சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு பெண் உட்பட 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 38 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.62,800-ஐ பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேப்பாக்கம் பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு பெண் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 38 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.62,800 -ஐ பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று (14.05.2023) சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

    அதன்பேரில், திருவல்லிக்கேணி டி1 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் தீவிரமாக கண்காணித்து, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக நேற்று (மே 14) 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு பெண் உட்பட 22 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட சூர்யபிரகாஷ், விஜி, சாரதி, கிருபாகரன், கோகுல்ராஜ், மணிகண்டன், அஜித், வெங்கடேஸ்வரலு, டேவிட் ஜேசன், ஷேக் ரசூல், குணால், பார்த்திபன், இப்திகர் ராயன், புகழேந்தி, கணேசன், சிவக்குமார், ஹரிகரன், அக்சரா, ஹரிகரன், யுவராஜ், பரசுதீன் ஆகிய 22 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 38 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.62,800 பறிமுதல் ய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 22 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.