உதகை 125வது மலர் கண்காட்சி துவக்கம்..

mcms 9 - 2026
#image_title

உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடங்கியுள்ளது.

மலைகளின் அரசியான உதகையில் கோடைகாலமானது நடைபெற்று வருகிறது. இந்த சீசனை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியிருப்பதனால், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

images 2023 05 19T133108024 - 2026
#image_title

அதன் முக்கிய நிகழ்வாக 10.15 மணியளவில் 125 மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா மற்றும் நீலகிரி ஆட்சி தலைவர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மலர்களை பார்வையிட்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலர் சிற்பங்களையும், மலர் அலங்காரங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த மலர் கண்காட்சியை பொறுத்தவரையில் சிறப்பு அம்சமாக 85,000 கார்னேசன் மலர் கொண்டு 46 அடி அகலம், 22 அடி உயரம் கொண்ட மயில் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

IMG 20230519 WA0075 - 2026
#image_title

20க்கும் மேற்பட்ட மலர் அலங்காரங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது. மலர் நாடங்களிலும் 35ஆயிரம் மலர் செடிகள், லட்சக்கணக்கான மலர்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 125 வது மலர் கண்காட்சியை குறிப்பிடும் வகையில் மலர் அலங்காரம் ஒன்றும் 175 ஆண்டுகள் சிறப்பு புகழ் மிக்க தாவரவியல் பூங்காவை குறிப்பிடும் வகையாக ஒரு மலர் அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சின்னங்களாக கருதப்படும் நீலகிரி வரையாடு, மரகத பூ, மரகத புறா, செங்காழ்ந்தல் மலர் போன்ற பல்வேறு மலர் சிற்பங்களும் அங்கங்கே கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல வளர்ந்து வரும் வனவிலங்குகள், செல்பி மேடை, மஞ்சள் பை என இருபதுக்கும் மேற்பட்ட உருவங்கள் சுமார் 2 லட்சம் மலர்களை கொண்டு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியானது 5 நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக வந்துள்ளனர். மலர் கண்காட்சியின் பாதுகாப்பை பொறுத்தவையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories