
கள்ளச்சாராய மரணத்தை மறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழைத் தேடி ஓடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், கள்ளச்சாராயத்தால் 23 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள்,
டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி… இவை எல்லாம் மறைக்க, நீங்கள் (மு.க. ஸ்டாலின்) ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம் என விமர்சித்துள்ளார்.
கர்நாடகப் படுதோல்வியை மறைக்கும் ஒற்றைத் தந்திரமாக ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளதாக முதல்வர் பதிவிட்ட சுட்டுரைப் பதிவை மறுபதிவு செய்து, அண்ணாமலை இந்த விமர்சனத்தை செய்துள்ளார்.