75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது-மோடி..

IMG 20230528 WA0097 - 2026
#பாராளுமன்ற திறப்பு விழாவில் உரையாற்றும் மோடி

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம் என புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மோடி உரையாற்றினார் புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது திறமை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளது. சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது என பேசினார்.

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

அதன்பின்னர் பாராளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

மேலும் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார். அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்த நேரத்தில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.

இது வெறும் கட்டிடம் மட்டுமல்ல 140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்கும் இடம். மே 28ஆம் தேதி வரலாற்றில் எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது. புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது திறமை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் கவுவரமாக உணர்கின்றனர். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பழமை மற்றும் புதுமைகளை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும். இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டிற்கு வழங்கப்படும் பரிசு.

இது நமது ஜனநாயகத்தின் கோயில், வார்த்தைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தான் பாராளுமன்றம். இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம். இது இந்தியாவின் வளர்ச்சியை மட்டுமல்ல உலகின் வளர்ச்சியையும் பறைசாற்றுகிறது. இன்றைய தினம் புனித செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த செங்கோல் நீதி, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றை பிரதிபலிக்கும். செங்கோலை மிகுந்த மதிப்போடு வணங்குகிறேன். செங்கோலின் கௌரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம். சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. செங்கோலை வழங்கிய ஆதீனங்களின் முன்பு நான் தலை வணங்குகிறேன்.

இந்தியா ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் தான் நமது சின்னம். நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காக்கவேண்டும். முயற்சியை தொடரும்போது முன்னேற்றமும் தொடரும். 75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories