காஞ்சி தேவராஜ ஸ்வாமி கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது!

images 51 2 - 2026
#image_title

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை (மே 31) வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவைத் தொடா்ந்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் உலா வருகிறாா்.

பழமையும், வரலாற்று சிறப்புமிக்கதும், அத்திவரதர் புகழ்பெற்றதுமான காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு  நடைபெற்றது.

ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் தேவராஜப்பெருமாள் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளிய பிறகு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, கருடன் படம் பொறித்த கொடி கொடி மரத்தில் கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

பின்னர் கொடி மரத்துக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோயில் பட்டாச்சாரியார்கள் கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள். 

கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலர் ச. சீனிவாசன், குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், கோயில் கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்வுக்கு பிறகு பெருமாள் தங்கச்சப்பரத்தில் நகரில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

IMG 20230531 WA0064 - 2026
#image_title

விழாவையொட்டி ஆலயத்தின் முன்பாக பிரம்மாண்டமான திருவிழா பந்தலும், திருக்கோவில் ராஜகோபுரம் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

இதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் இரண்டாம் தேதி கருட சேவை கட்சியும், 6ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. வரும் ஜூன் 8 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவையொட்டி தற்காலிகமாக நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories